காட்டுத் தீ எச்சரிக்கை - வருட ஆரம்பத்திலிருந்து 9,000 தீப்பற்றல்கள்!
3 ஆவணி 2025 ஞாயிறு 11:26 | பார்வைகள் : 1417
இன்று ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2025 – Bouches-du-Rhône பகுதி மீண்டும் ஒருமுறை தீவிரக் காடுத்தீ அபாயம் காரணமாக சிவப்பு எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளது. இந்த ஞாயிற்றுக்கிழமை, இப்பகுதியில் தீ பரவலுக்கான மிக அதிக அபாயம் உள்ளது.இப்பகுதியுடன் சேர்த்து, மொத்தம் 7 தெற்கு பிரான்சுப் பகுதிகள் ஞாயிறு தினத்துக்கான செம்மஞசள் எச்சரிக்கையில் உள்ளன.
அவை:
Pyrénées-Orientales
Aude
Hérault
Gard
Vaucluse
Drôme
Var
மற்றும் கோர்ஸ் தீவு
ஜூலை மாதத்தின் இரண்டாவது பாதியில், கடுமையான வெப்பம் மற்றும் வறட்சி நிலைமை காற்றுடன் சேர்ந்து பல்வேறு பகுதிகளில் தீ பரவலை அதிகரித்துள்ளன.
பொதுமக்கள் பாதுகாப்பு சேவை, இதுவரை 15,000 ஹெக்டேருக்கும் மேற்பட்ட காடுகள் தீக்கிரையாகி உள்ளதாகத் தெரிவித்துள்ளது. வருட ஆரம்பத்திலிருந்து 9,000 தீப்பற்றல்கள் ஏறபட்டுள்ளன.
காவல்துறையினரின் எச்சரிக்கை
இந்த நிலைமையின் காரணமாக, பல மாநில ஆணையர்கள், வார இறுதிக்காக காடுப்பகுதிகளை பொதுமக்கள் நுழைவுக்கு தடைவிதித்துள்ளனர்.
Météo-France தொடர்ந்து விழிப்புடன் கண்காணிக்கிறது. பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், அதிகாரபூர்வ அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan