T20 வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை படைத்த ஃபாஃப் டூப்ளசிஸ்

30 ஆனி 2025 திங்கள் 12:18 | பார்வைகள் : 123
டூப்ளசிஸ் MINY அணிக்கு எதிராக அடித்த சதத்தின் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட்(MLC) தொடர் ஜூன் 12 ஆம் திகதி தொடங்கி ஜூலை 13 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
இதில், 21வது லீக் போட்டியில், டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்(TSK) மற்றும் MI நியூயார்க்(MINY) அணிகள் மோதியது.
நாணய சுழற்சியில் வென்ற நியூயார்க் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் துடுப்பாட்டம் ஆடிய TSK அணி, 20 ஓவர் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 223 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக அணித்தலைவர் டூப்ளசிஸ், ஆட்டமிழக்காமல் 103 ஓட்டங்கள் குவித்தார்.
தொடர்ந்து, 224 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய MINY அணி, 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்களை இழந்து, 184 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம், 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் TSK அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் TSK அணித்தலைவர் ஃபாஃப் டூப்ளசிஸ்(Faf du Plessis) சதமடித்ததன் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
40 வயதிற்கு பின்னர் 2 சதமடித்த முதல் துடுப்பாட்டக்காரர் மற்றும் MLC தொடரில் 3 சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
மேலும், T20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த பட்டியலில், ரோஹித் சர்மா , ஜோஸ் பட்லர், ஆரோன் பிஞ்ச், மைக்கேல் கிளிங்கர், டேவிட் வார்னர் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோருடன் 4வது இடத்தை பகிர்கிறார்.
இந்த பட்டியலில், 22 சதங்களுடன் கிறிஸ் கெய்ல் முதலிடத்திலும், பாபர் அசாம் 11 சதங்களுடன் 2வது இடத்திலும், விராட் கோலி 9 சதங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
மேலும், ஒரு அணித்தலைவராக T20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற பெருமையை டூப்ளசிஸ் பெற்றுள்ளார்.
டூப்ளசிஸ், 200 T20 இன்னிங்ஸ்களில் விளையாடி, 8 சதங்களை அடித்துள்ளார். மைக்கேல் கிளிங்கர் மற்றும் பாபர் அசாம் 7 சதங்களுடன் 2வது இடத்தில் உள்ளனர்.