கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் திருமணம் தள்ளிவைப்பு
25 ஆனி 2025 புதன் 12:14 | பார்வைகள் : 3250
இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் திருமணம் அடுத்த ஆண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் அலிகாரில் பிறந்த ரிங்கு சிங், கடந்த 2023 ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான T20 போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி 5 பந்துகளில் 5 சிக்சர்களை விளாசி பிரபலமானார்.
இதனால், கொல்கத்தா அணி ஏலத்திற்கு முன்பாகவே அவரை ரூ,.13 கோடிக்கு தக்க வைத்துள்ளது.
27 வயதான ரிங்கு சிங்கிற்கு, உத்திரப்பிரதேச மாநிலம், சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த பெண் எம்.பியான பிரியா சரோஜ் என்பவருக்கும் கடந்த ஜூன் 8 ஆம் திகதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இதில், கிரிக்கெட் வீரர்கள், அரசியல்வாதிகள் உட்பட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். நவம்பர் 19 ஆம் திகதி, வாரணாசியில் வைத்து, திருமணத்தை நடத்த இரு வீட்டாரும் திட்டமிட்டனர்.
இந்த நிலையில், இந்த திருமணம் 2026 ஆம் ஆண்டு ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் போட்டிகளை மனதில் வைத்து, ரிங்கு சிங் திருமணத்தை அடுத்த ஆண்டிற்கு தள்ளி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan