ரஜினியுடன் நடனமாடுபவர் இவரா?
24 ஆனி 2025 செவ்வாய் 17:06 | பார்வைகள் : 2221
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்தப் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் 25ஆம் தேதி வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த பாடலில் ரஜினியுடன் அனிருத் மூன்று நிமிடங்கள் நடனமாட இருப்பதாகவும், இந்த பாடல் திரையில் தோன்றும் போது ரசிகர்கள் எழுந்து ஆட்டம் போடும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு 'கூலி' படத்தின் 'Chikitu என்ற பாடல் வெளியாக உள்ள நிலையில், இந்த பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தப் பாடலின் புரோமோ வீடியோ நேற்று வெளியானது. ஒரு நிமிடத்திற்கும் மேல் உள்ள இந்த வீடியோவில் அனிருத் மற்றும் சாண்டி மாஸ்டர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, இந்த பாடலை டி. ராஜேந்தர் பாடியிருப்பதாகவும், இந்த பாடலில் ரஜினியுடன் அனிருத் இணைந்து நடனமாட இருப்பதாகவும் கூறப்படுவது, இந்த பாடலின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan