2025 ஐபிஎல் கோப்பை இந்த அணிக்குதான் - அனைத்து ஏஐ தளங்களும் ஒரே பதில்
3 ஆனி 2025 செவ்வாய் 12:25 | பார்வைகள் : 1953
2025 ஐபிஎல் கோப்பையை எந்த அணி வெல்லும் என்ற கேள்விக்கு அனைத்து ஏஐ தளங்களும் ஒரே பதிலை அளித்துள்ளன.
2025 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி, இன்று குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையே நடைபெற உள்ளது.
இந்நிலையில், சாட்ஜிபிடி (ChatGPT), ஜெமினி (Gemini), க்ரோக் (Grok) ஆகிய AI தளங்கள், RCB தான் 2025 ஐபிஎல் கோப்பையை வெல்லும் என ஒருசேர கணித்துள்ளன.
RCB அணி ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா போன்ற சிறந்த பந்துவீச்சு மற்றும் விராட் கோலி துடுப்பாட்டத்தில் அசத்துவதோடு, குவாலிஃபையர் 1 போட்டியில், PBKS அணியை 101 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் செய்து, 60 பந்துகள் மீதம் வைத்து,8 விக்கெட் வித்தியாசத்தில் RCB வெற்றி பெற்றது.
3 அணிகளை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்ற ஷ்ரேயஸ் ஐயரின் தலைமைத்துவம் மற்றும் அவரது சிறப்பான துடுப்பாட்டம் பஞ்சாப் அணிக்கு பலம் அளிக்கிறது. இந்த தொடரில் RCB அணியே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது.
பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணி இதுவரை 36 முறை நேருக்கு நேர் மோதி, இரு அணிகளும் தலா 18 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் 3 முறை மோதியதில், 2 முறை பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது. அதில் ஒரு முறை 101 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் செய்து, 60 பந்துகள் மீதம் வைத்து, RCB வெற்றி பெற்றுள்ளது.
RCB அணிக்கு ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மாவின் பந்துவீச்சு மற்றும் விராட் கோலியின் துடுப்பாட்டம் கூடுதல் பலமளிக்கிறது.
ஷ்ரேயஸ் ஐயரின் தலைமைத்துவம் RCB அணிக்கு கடும் சவால் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
RCB அணியின், தற்போதைய ஃபார்ம், சமநிலை, உயர் அழுத்த சூழ்நிலைகளைக் கையாளும் திறன் ஆகியவை கருத்தில் கொண்டு RCB அணியே வெற்றி பெரும் என கணிக்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan