Paristamil Navigation Paristamil advert login

ஐரோப்பிய சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றிய போர்த்துக்கல்! ரொனால்டோ வெளியிட்ட பதிவு

 ஐரோப்பிய சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றிய போர்த்துக்கல்! ரொனால்டோ வெளியிட்ட பதிவு

2 ஆனி 2025 திங்கள் 11:37 | பார்வைகள் : 1048


U17 ஐரோப்பிய சாம்பியன் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில், போர்த்துக்கல் அணி 3-0 என்ற கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி மகுடம் சூடியது.

17 வயதிற்குட்பட்டோருக்கான ஐரோப்பிய சாம்பியன் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி அல்பேனியாவில் நடந்தது.

Arena Kombetare மைதானத்தில் நடந்த இப்போட்டியில் போர்த்துக்கல் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின.

ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் போர்த்துக்கல் வீரர் அனீஸியோ கோல் அடித்தார். அடுத்த 8 நிமிடங்களில் டுவார்டே லோப்ஸ் கன்ஹா (38வது நிமிடம்) கோல் அடித்தார்.

மறுமுனையில் பிரான்ஸ் அணி கோல் அடிக்க திணற, 60வது நிமிடத்தில் போர்த்துக்கலின் கில் மட்டேயோ நெவ்ஸ் (Gil Matteo Neves) கோல் அடித்தார்.

கடைசிவரை பிரான்ஸ் அணியால் கோல் அடிக்க முடியாததால், போர்த்துக்கல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

வெற்றி பெற்ற போர்த்துக்கல் அணிக்கு ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) வாழ்த்து கூறி, "நட்சத்திரங்களுக்கு வாழ்த்துக்கள்!" என பதிவிட்டுள்ளார்.      

 

வர்த்தக‌ விளம்பரங்கள்