ஆசிய தடகள போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம் - பதக்கம் வென்ற தமிழக வீரர்
28 வைகாசி 2025 புதன் 11:46 | பார்வைகள் : 4796
தென் கொரியாவின் குமியில், 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் இன்று தொடங்கியது. இதில் 43 நாடுகளைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.
இந்தியாவில் இருந்து 59 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 9 பேர் இடம்பிடித்துள்ளனர். தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா இந்திய அணியின் மேலாளராக சென்றுள்ளார்.
20 கி.மீட்டர் நடைப்பந்தய போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த செர்வின் செபாஸ்டியன் 3வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
செர்வின், 1 மணி நேரம் 21 நிமிடம் 13 வினாடிகளில் 20 கி.மீ இலக்கை கடந்துள்ளார்.
வெண்கல பதக்கம் வென்ற செர்வினுக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
குல்வீர் சிங் பந்தய தூரத்தை 28:38.63 என்ற நேரத்தில் கடந்து தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan