அமெரிக்காவின் தாக்குதல் - பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள்
22 ஆனி 2025 ஞாயிறு 11:10 | பார்வைகள் : 3829
அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும்வோம் என ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி, கடந்த 13 ஆம் திகதி, இஸ்ரேல் அதன் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானும் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், இரு நாடுகளுக்குமிடையே போர் வெடித்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை ஈரானில் உள்ள 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நேரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இதனை உறுதி செய்துள்ளார். ஈரான் அமைதிக்கு திரும்பா விட்டால் கூடுதல் இடங்களில் தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை ஈரானில் உள்ள 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நேரடி தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இதனை உறுதி செய்துள்ளார். ஈரான் அமைதிக்கு திரும்பா விட்டால் கூடுதல் இடங்களில் தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், 3 அணுசக்தி நிலையங்களையும் சிறிது காலத்திற்கு முன்பு காலி செய்துவிட்டதாக ஐஆர்ஐபியின் அரசியல் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பஹரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரித்துள்ளார்.
மேலும், அமெரிக்க, பிரிட்டிஷ், ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தியை மூட வேண்டும் என்று காமெனியின் நெருங்கிய நம்பிக்கையாளருமான ஹொசைன் ஷரியத்மதாரி தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரானுக்கு ஆதரவாக ஹௌதி உள்ளிட்ட அமைப்புகளும் இந்த தாக்குதலில் இறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மத்திய கிழக்கில் உள்ள நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan