ஈபிள் கோபுரத்தை பலஸ்தீன நிறத்தில் ஒளிரக் கோரிக்கை - புதிய அரசியல் விளையாட்டு!
19 ஆனி 2025 வியாழன் 05:00 | பார்வைகள் : 8226
2025 ஜூன் 18-ஆம் தேதி, சோஷலிஸ்ட் கட்சியின் பேச்சாளர் மற்றும் சென்-சன்-துனியின் பிராந்தியத் தலைவராக உள்ள ஸ்தெபான் த்ரூசெல் (Stéphane Troussel) ஈபிள் கோபுரத்தை பஸ்தீனின் நிறங்களில், சிவப்பு, கருப்பு, பச்சை மற்றும் வெள்ளையாக ஒளியூட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இது, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான தொடர்ச்சியான போர் காரணமாக பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஒரு கோரிக்கை எனத் தெரிவிக்கப்பட்டுஙள்ளது.
கடந்த காலங்களில் உக்ரைன் மற்றும் ,இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈபிள் கோபுரம் ஒளியூட்டப்பட்டது போல், பஸ்தீனுக்கும் ,இதேபோன்ற மனிதாபிமான பார்வையுடன் நடத்த வேண்டும் என ஸ்தெபான் த்ரூசெல் வலியுறுத்தினார்.'ஒவ்வொரு உயிரும் மதிக்கப்பட வேண்டும்' என்றார் அவர்.
ஜூன் 18 அன்று, பஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்கப் போவதாக இருந்த பிரெஞ்சு குடியரசுத் தலைவர் எமானுவல் மக்ரோன் நடத்தவிருந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது என்பதை ஸ்தெபான் த்ரூசெல் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
அவர் ஈபிள்; கோபுரத்தின் நிர்வாக நிறுவனமான SETE மற்றும் அதன் தலைவர் ஜோன் பிரோன்சுவா மாரத்தானிற்கு (Jean-François Martins) கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'ஈபிள் கோபுரத்தை பஸ்தீனின் நிறங்களில் ஒளியூட்டுவது, பஸ்தீன மக்களின் துயரத்தில் பிரான்ஸ் அமைதியாக இல்லை என்பதைக் காட்டும் வலிமையான செய்தியாக இருக்கும்' என அவர் கூறியுள்ளார்.
மேலும், இஸ்ரேலின் பிரதமர் பென்யமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கொடுத்துள்ள பிடியாணையைக் குறிப்பிடும் அவர், இஸ்ரேல் அரசு ஒரு வலதுசாரி அரசு என்றும், அது போர் குற்றங்கள் மற்றும் மனிதத்திற்கெதிரான குற்றங்களை செய்து வருவதாகவும் கடுமையாக குற்றஞ்சாட்டினார்.
ஏற்கனவே ஜூன் 13 அன்று, இஸ்ரேலிய ஆயுத நிறுவனங்கள் பங்கேற்கும் காரணத்தால், லு பூர்ஜே விமான கண்காட்சி திறப்பு நிகழ்வில் பங்கேற்பதைத் தவிர்ப்பதாக த்ரூசெல் அறிவித்திருந்தார்.
இந்த முயற்சி, பஸ்தீனுக்கு ஆதரவாக பிரான்சில் அதிகரித்து வரும் அரசியல் கோசங்களின் ஒரு பகுதியாகும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan