Paristamil Navigation Paristamil advert login

அனைத்து வகையான மருந்துகளை வாங்க Vitale/AME அட்டை கட்டாயம்!

அனைத்து வகையான மருந்துகளை வாங்க Vitale/AME அட்டை கட்டாயம்!

18 ஆனி 2025 புதன் 15:34 | பார்வைகள் : 4104


மருத்துவ காப்பீட்டு நிறுவனம் (Cnam) தற்போது மருந்தகங்களில் கட்டண முன் செலுத்தலைத் தவிர்க்க (tiers payant) Vitale கார்டை கட்டாயமாகக் காண்பிக்க வேண்டும் என ஜூன் 17, செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. 

இது குறிப்பாக அதிக விலையுள்ள அல்லது மோசடி வாய்ப்புள்ள மருந்துகளை வழங்கும்போது பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். தற்போது அனைத்து வகையான மருந்துகளை வாங்குவதற்கும் Vitale கார்டை வைத்திருக்க வேண்டும்.

மருத்துவ உதவிப் பயனாளிகள் (AME) தங்களது AME கார்டை காண்பிக்க வேண்டும். 3 மாதத்திற்கு குறைவான குழந்தைகள் மற்றும் Ehpad குடியிருப்பாளர்கள் போன்ற சில சிறப்பு நிலைகளுக்கு விதிவிலக்குகள் வழங்கப்படும். 

Cnam இதை சுகாதார சேவைகளின் சரியான பயன்பாடு மற்றும் மோசடிகளை தடுக்கும் முயற்சியாக விளக்கியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்