Paristamil Navigation Paristamil advert login

எலும்புக்கூடுகள் காட்சியகம் இரு வாரங்களுக்கு மூடப்படுகிறது!!

எலும்புக்கூடுகள் காட்சியகம் இரு வாரங்களுக்கு மூடப்படுகிறது!!

18 ஆனி 2025 புதன் 07:00 | பார்வைகள் : 6450


 

பரிசில் உள்ள எலும்புக்கூடுகள் காட்சியகமான Catacombes, மூடப்பட்டுள்ளது.  

அதில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதை அடுத்து, அருங்காட்சியகம் மூடப்பட்டுள்ளது.  பரிசில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் பணியாளரின் வருகை நேரத்தைக் கண்காணிக்கும் கருவி ஒன்று பொருத்தப்பட்டு வருகிறது. பணியாளர்கள் நுழையும் போதும், வெளியேறும் போதும், அவை தரவுகள் பதிவு செய்யும்.

இந்த கருவி அமைப்பதைக் கண்டித்தே Catacombes பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணியாளர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் இடையே இன்று புதன்கிழமை பேச்சுவார்தை இடம்பெற உள்ளது.

இந்த வேலை நிறுத்தம் இரு வாரங்களுக்கு தொடரும் என தெரிவிக்கப்படுகிறது. அருங்காட்சியகங்களும் இரு வாரங்களுக்கு மூடப்பட உள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்