Paristamil Navigation Paristamil advert login

ட்ரம்ப் விமர்சனங்கள் - ஒரு சிறிய இடைஞ்சல் மட்டுமே!

ட்ரம்ப் விமர்சனங்கள் - ஒரு சிறிய இடைஞ்சல் மட்டுமே!

18 ஆனி 2025 புதன் 00:00 | பார்வைகள் : 6309


G7 மாநாட்டில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன், டொனால்ட் ட்ரம்ப் தன் மீது வலைதளத்தில் (Truth Social) விமர்சனம் செய்தது குறித்து சிறிதும் பதறவில்லை என்று தெரிவித்துள்ளார். இது தன்னை ஒன்றும் கலங்க வைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

என்னை அது பூச்சி கடித்தது போலும் கூட கலங்க வைக்கவில்லை என்றார் மக்ரோன்.

கனடாவில் நடைபெற்ற G7 உச்சிமாநாட்டின் போது ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதலில் "அனைவரையும் பேச்சுவார்த்தை மேசைக்கு மீண்டும் கொண்டு வர அமெரிக்கா தேவை" என்று பிரெஞ்சு ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் செவ்வாயன்று கூறினார்.

மோதல் குறித்து பேசியபோது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவர் மீது சுமத்தப்பட்ட விமர்சனம் குறித்து கேட்டபோது, ​​"முக்கியமாக போர் நிறுத்தம் பற்றி பேசியது டிரம்ப் தான்" என்று பிரெஞ்சு தலைவர் மீண்டும் வலியுறுத்தினார்.

நேற்றைய தினம், மக்ரோன் ஈரான்-இஸ்ரேல் மோதலில் அமெரிக்கா ஒரு ஒப்பந்தத்தை முயற்சிக்கிறது என குறிப்பிட்டதற்காக, ட்ரம்ப் அதனை 'பொய் செய்தி' என நிராகரித்து,

'எமானுவல் எதையும் புரிந்துகொள்வதில்லை' எனவும் கடுமையாக தாக்கியிருந்தார் ட்ரம்ப்.

இவ்வளவையும் வெறும் தூசு போல் தட்டி விட்டுள்ளார் மக்ரோன்.

வர்த்தக‌ விளம்பரங்கள்