Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

ஈரான் - இஸ்ரேல் மோதல் - மக்ரோனும் ட்ரம்பும் மோதல்!

ஈரான் - இஸ்ரேல் மோதல் - மக்ரோனும் ட்ரம்பும் மோதல்!

17 ஆனி 2025 செவ்வாய் 17:38 | பார்வைகள் : 4573


இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்றுவரும் மோதலின் பின்னணியில், பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் கனடாவில் நடைபெற்ற G7 மாநாட்டின் போது இரு நாடுகளும் பொதுமக்கள் மீது தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று கோரினார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் மாநாடு முடிவதற்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் மிக அவசரமாக நாட்டை விட்டு வெளியெறினார்.

«அமெரிக்கா ஒரு அமைதிக்கான ஒப்பந்தத்தை உருவாக்க முடிந்தால், அது மிகவும் நல்லது» என தெரிவித்தார். இதனை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், G7 மாநாட்டை முன்கூட்டியே விட்டு வெளியேறினார், இது அமைதிப் பேச்சுவார்த்தைக்கான ஒரு பகுதியாக இருக்கலாம் என மக்ரோன் நினைத்தார்.

ஆனால் ட்ரம்ப் இதை முற்றிலும் மறுத்து, «மக்ரோனுக்கு எதுவும் புரியாது» என்றும், «அமைதி ஒப்பந்தம் எதுவும் இல்லை. G7 மாநாட்டை விட்டு நான் வெளியேறியதற்கு வேறு பெரிய காரணங்கள் உள்ளன» என்றும் கூறி மக்ரோனை மட்டம் தட்டியுள்ளார்.

தொடர்ந்து, Truth Social என்ற தனது சமூக வலைதளத்தில், மக்ரோன் தன்னைப் பற்றி தவறான தகவலை பரப்புவதாக ட்ரம்ப் குற்றம்சாட்டினார்.

ஆனாலும், அமெரிக்காவின் இஸ்ரேல் தூதரகம் இன்று மூடப்பட்டுள்ளதுடன், ஊழியர்களுக்குப் பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.

எமானுவல் மக்ரோன் பொய் சொல்வதாகத் தெரிவித்து விட்டு, ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் தனது தேசிய பாதுகாப்பு குழுவுடன் முக்கிய சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். இது ட்டரம்பின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தி உள்ளது.

G7 மாநாட்டின் சூழ்நிலையில், இரு தலைவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்