கோலியை போல் வெளிநாட்டில் குடியேறும் தோனி? வைரலாகும் பதிவு

17 ஆனி 2025 செவ்வாய் 18:13 | பார்வைகள் : 114
தோனி குடும்பத்துடன் நியூசிலாந்தில் குடியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான விராட் கோலி, கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து வெளியேறி, குடும்பத்துடன் லண்டனில் குடிபெயர்ந்தார்.
ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக மட்டுமே இந்தியாவிற்கு வருகிறார்.
இதே போல், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் தோனியும் குடும்பத்துடன் நியூசிலாந்து நாட்டில் குடியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் நடிகர் கமல் ஆர் கான் தனது எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பான பதிவை வெளியிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு, ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
2019 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த தோனி, ஐபிஎல் தொடர்களில் மட்டும் விளையாடி வருகிறார்.
ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் வசித்து வரும் தோனி, அவ்வப்போது ஐரோப்பா மற்றும் துபாய் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
முன்னதாக, தோனி அளித்த நேர்காணல் ஒன்றில், நியூசிலாந்து போன்ற பாதுகாப்பான நாட்டில் எழுந்திருக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் தோனி நியூசிலாந்து செல்வது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.