SFR அழைப்புகள், இணையம் மற்றும் SMS முடக்கம்: வாடிக்கையாளர்கள் அவதி!!

16 ஆனி 2025 திங்கள் 16:18 | பார்வைகள் : 6300
SFR தொலைத்தொடர்பு நிறுவனம் இன்று ஒரு பெரிய தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கோளாறு காரணமாக SMS, அழைப்புகள் மற்றும் இணைய சேவைகள் போன்றன செயலிழந்துள்ளன.
SFR நிறுவனம் சமூக ஊடகத்தில் தெரிவித்ததாவது, தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர்கள் செயல்திறனை மீட்டெடுக்க முழுமையாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்றும், ஏற்பட்ட சேதத்திற்கு மன்னிப்பும் தெரிவித்துள்ளனர்.
DownDetector இணையதளத்தில் காலை 11 மணிக்கு புகார்கள் தொடங்கியதை அடுத்து, மதியம் 12 மணிக்கு சுமார் 10,900 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த கோளாறு சீரற்ற முறையில் வாடிக்கையாளர்களை பாதிக்கும் காரணம் அல்லது சரியாகும் நேரம் பற்றி எந்தத் தகவலையும் SFR நிறுவனம் தெரிவிக்கவில்லை.