விமான விபத்தால் விற்பனை வீழ்ச்சி!!

16 ஆனி 2025 திங்கள் 07:00 | பார்வைகள் : 6959
இன்று ஜூன் 16 ஆம் திகதி திங்கட்கிழமை பரிசில் ‘சர்வதேச விமானக் கண்காட்சி’ (Salon du Bourget) ஆரம்பமாகிறது. பல்வேறு முன்னணி விமான தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புதிய விமானங்கள், போர்விமானங்களை காட்சிப்படுத்த உள்ளனர்.
இந்நிலையில், இம்முறை கண்காட்சியில் பிரெஞ்சு நிறுவனமான Airbus நிறுவனம் அதிக விற்பனைகளையும், முன் பதிவுகளையும் பெறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. Airbus நிறுவனத்தின் நேரடி போட்டியாளரான அமெரிக்காவின் Boeing நிறுவன விமானங்களுக்கான விற்பனைகள் மிக குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான காரணம் நீங்கள் அறிந்தது தான்.
வியாழக்கிழமை இந்தியாவில் இடம்பெற்ற Boeing 787 விமான விபத்து உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. Boeing நிறுவனத்தின் விமான விபத்து சராசரி, Airbus இனை விடவும் அதிகம் என்பதால் விற்பனையில் சரிவு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுக்கு வருகை தர இருந்த Boeing நிறுவனத்தின் CEO - Kelly Ortberg இந்த விபத்தின் பின்னர் முடிவினை மாற்றி, தாம் வரவில்லை என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025