Drancy: இரத்தக் களமாக மாறிய மதுபான விருந்து! இருவர் கைது, ஒருவர் மரணம்!!

15 ஆனி 2025 ஞாயிறு 15:44 | பார்வைகள் : 2965
Drancy நகரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஒரு விருந்தின் போது, அதிக அளவில் மதுபானம் அருந்தியதின் பின்னணி மற்றும் வாக்குவாதம் காரணமாக துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது.
இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மற்றொருவரின் உயிர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பக்கத்து வீட்டுக்காரர் துப்பாக்கி சத்தங்களை கேட்டு நேற்று 11 மணியளவில் காவல்துறையினரை அழைத்துள்ளனர்.
விசாரணையில் இரத்தக்கறைகள் மற்றும் துப்பாக்கி தோட்டாக்கள் காணப்பட்டுள்ளன. இரண்டு சந்தேக நபர்கள் தாங்களாகவே காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து Bobigny நீதிமன்றம் மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவை விசாரணைக்காக நியமித்துள்ளது. மூன்றாவது நபர் சற்று குறைந்தளவிலான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரும் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர், ஆனால் அவர்களின் குற்றப் பங்கு என்ன என்பது இன்னும் தெரியவில்லை. காவல்துறையினர் சம்பவம் முழுவதையும் விளக்க முயற்சித்து வருகின்றனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025