Paristamil Navigation Paristamil advert login

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்.. அவசரமாக தொலைபேசியில் அழைத்த மக்ரோன்!!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்.. அவசரமாக தொலைபேசியில் அழைத்த மக்ரோன்!!

13 ஆனி 2025 வெள்ளி 19:00 | பார்வைகள் : 4617


 

ஈரான் மீது இன்று அதிகாலை இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டது. அதை அடுத்து ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவை தொலைபேசியில் அழைத்து உரையாடியுள்ளார்.

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குவதற்கு முன்பாக 'முற்கூட்டிய தாக்குதல்' என குறிப்பிட்டு இஸ்ரேல் 200 ஏவுகணைகளை ஈரானின் முக்கிய அணு நிலையங்கள், இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டது. அதை அடுத்து, இன்று நண்பகலின் பின்னர் நெத்ன்யாஹுவுடன் மக்ரோன் தொலைபேசியில் உரையாடியதாக எலிசே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் மேலதிக விபரங்களை எலிசே வெளியிடவில்லை.  

காஸாவில் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தடுப்பதாகவும், குடியிருப்பு பகுதிகளை இலக்கு வைத்து மக்களைக் கொல்வதாகவும் இஸ்ரேல் மீது மக்ரோன் கடுமையான விமர்சித்திருந்தார். அதன் பின்னர் இடம்பெறும் தொலைபேசி உரையாடல் இதுவாகும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்