Paristamil Navigation Paristamil advert login

பரிஸில் சிறுவர்களுக்கேற்ற சிறிய பெஞ்ச்கள்!!

பரிஸில் சிறுவர்களுக்கேற்ற சிறிய பெஞ்ச்கள்!!

13 ஆனி 2025 வெள்ளி 14:36 | பார்வைகள் : 3647


பரிஸ் நகரம், சிறுவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட சிறிய டாவியூட் (Davioud) பெஞ்ச்களை நிறுவத் தொடங்கியுள்ளது. இந்த இருப்பிடங்கள், பாரம்பரிய பரிஸ் நகர அம்சமான டாவியுட் பெஞ்ச்களின் சிறிய வடிவமாகும். 

குழந்தைகள் எளிதாக அமரக் கூடிய உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த இருப்பிடங்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் உள்ளன. ஆரம்பமாக Pierre-Foncin தெருவிலும், இன்னும் நூற்றுக்கும் மேற்பட்ட பெஞ்ச்கள், பள்ளி தெருக்களில் இந்தாண்டே உருவாக்கப்படவுள்ளன.

இந்த முயற்சி, பரிஸ் நகரம் சிறுவர்களின் தேவைகளுக்கேற்ற மாறுதலாகும். பெஞ்ச்கள், குழந்தைகள் ஓய்வு எடுக்கவும், ஒன்றாக கூடவும் வசதியாக இரக்கும். இது பொது இடங்களில் குழந்தைகளுக்கு மேன்மையாக மாற்று திட்டத்தின் ஒரு பகுதியாகும். 

எதிர்காலத்தில், இவை பாடசாலை விளையாட்டு மைதானங்களிலும் மற்றும் நடைபாதைத் தெருக்களிலும் அமைப்பதற்கு நகர நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்