பரிஸ் : நகைக்கடை ஊழியரை மிரட்டி - €100,000 மதிப்புள்ள நகைகள் கொள்ளை!!
13 ஆனி 2025 வெள்ளி 09:24 | பார்வைகள் : 3537
நகைக்கடை ஊழியர் ஒருவரை மிரட்டி, அவர் எடுத்துச் சென்ற நகைகள் கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று பரிசில் இடம்பெற்றுள்ளது.
பரிசில் மிக பிரபலமான Maison Messika நகைக்கடையின் ஊழியர் ஒருவரே முகம் மறைக்கப்பட்ட கொள்ளையர்களால் மிரட்டப்பட்டு கொள்ளையிடப்பட்டார். நேற்று ஜூன் 12, வியாழக்கிழமை குறித்த ஊழியர் நகைகள் சிலவற்றை எடுத்துக்கொண்டு பரிஸ் 9 ஆம் வட்டாரத்தில் உள்ள வாடிக்கையாளர் ஒருவரது வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த போது அவரை ஸ்கூட்டர் ஒன்றில் வந்த கொள்ளையர்கள் இருவர் திடீரென வழிமறிந்தனர்.
கைத்துப்பாக்கி ஒன்றைக் காட்டி அவரை மிரட்டி, அவரிடம் இருந்த நகைகளைக் கொள்ளையிட்டுக்கொண்டு சென்றனர். ஊழியர் காயமடையவில்லை. கொள்ளையர்கள் தப்பிச் சென்றதும் உடனடியாக அவர் காவல்துறையினரை அழைத்தார்.
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொள்ளையிடப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு €100,000 eன தெரிவிக்கப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan