Paristamil Navigation Paristamil advert login

வாழைக்காய் சாப்ஸ்!

வாழைக்காய் சாப்ஸ்!

8 ஆனி 2025 ஞாயிறு 17:42 | பார்வைகள் : 295


வாழைக்காய் வைத்து பொரியல், கூட்டு,புட்டு,வறுவல் போன்றவை அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனா வாழைக்காய் சாப்ஸ் கேள்விப்பட்டிருக்கீங்களா. இதை ஒருமுறை செய்யதால், இதனை சாம்பார் சாதம், ரசம் சாதம் ,தயிர் சாதம் போன்றவைகளுக்கு வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

தேவையானவை: வாழைக்காய் - 2 (பெரிய துண்டுகளாக நறுக்கியது)எண்ணெய் - 2 தேக்கரண்டிவெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டிமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டிமிளகாய் தூள் - 1 தேக்கரண்டி (தேவைக்கேற்ப)மல்லித்தூள் - 1 தேக்கரண்டிகொத்தமல்லி - சிறிதளவு பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம்,உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: முதலில் பச்சை வாழைக்காயை தோலுரித்து, துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அதன்பிறகு ஒரு வாணலில் எண்ணெயை ஊற்றி, வெட்டிய வாழைக்காய் சேர்த்து, தேவையான அளவு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

அதன்பிறகு ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சேர்த்துக் கொள்ளவும் அதன் பிறகு, வெங்காயம், தேவையான அளவு தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். நன்றாக வதக்கிய பிறகு மிளகாய் தூள், தனியா தூள் தேவையான தண்ணீர் தெளித்து வதக்க வேண்டும். அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து அரைத்து வைத்திருந்த மசாலா சேர்த்து,வதக்கியவாழைக்காய் துண்டுகளை சேர்த்து மசாலாவுடன் நன்கு கலக்கி, மிதமான தீயில் வறுக்கவும்.வாழைக்காய் வெந்து, மசாலா நன்கு கலந்து, எண்ணெய் பிரிந்து வந்தால் போதும் சுவையான "வாழைக்காய் சாப்ஸ்" தயார்.

இந்த வாழைக்காய் சாப்ஸ்ஸை தயிர் சாதம்,சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அல்டிமேட் ஆக இருக்கும். வாழைக்காய் வறுவலை ஓரங்கட்டி விடும் இந்த "வாழைக்காய் சாப்ஸ்".

வர்த்தக‌ விளம்பரங்கள்