சிறைத்தண்டனைகளை இரத்துச் செய்யும் முறை நீக்கப்படவேண்டும்.. பொதுமக்கள் ஆதரவு குரல்!!!

7 ஆனி 2025 சனி 07:00 | பார்வைகள் : 3298
பிரான்சில் நடைமுறையில் உள்ள சிறைத்தண்டனைகளை இரத்துச் செய்தல் அல்லது நிறுத்தி வைக்கும் முறையினை ( prison avec sursis) நீக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்று ஜூன் 7, சனிக்கிழமை காலை வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளில் இது தெரியவந்துள்ளது. பிரெஞ்சு மக்களில் இரண்டில் ஒருவருக்கும் அதிகமானோர் (53% சதவீதமானவர்கள்) இந்த முறை நீக்கப்படவேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். 46% சதவீதமானவர்கள் நீக்கப்படக்கூடாது எனவும், 1% சதவீதமானவர்கள் தங்களிடம் கருத்து இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
PSG வெற்றிக்கொண்டாட்டம் பலத்த வன்முறையில் முடிந்ததை அடுத்து, இந்த சட்டம் தொடர்பில் மக்களது மனநிலை மாறியுள்ளதாகவும், முந்தைய கருத்துக்கணிப்பில் மூன்றில் ஒருவர் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது இரண்டில் ஒருவராக அது அதிகரித்துள்ளது.
இந்த கருத்துக்கணிப்பை CSA நிறுவனம் CNEWS, Europe 1 மற்றும் JDD போன்ற ஊடகங்களுக்காக மேற்கொண்டிருந்தது. இதில் 18 வயது நிரம்பிய 1,010 பேர் பங்கேற்றிருந்தனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1