Paristamil Navigation Paristamil advert login

இல்-து-பிரான்ஸ் உட்பட 25 மாவட்டங்கள் - பெரும் மின்னல் மழை எச்சரிக்கை!

இல்-து-பிரான்ஸ் உட்பட 25 மாவட்டங்கள் -  பெரும் மின்னல் மழை எச்சரிக்கை!

7 ஆனி 2025 சனி 00:02 | பார்வைகள் : 3737


இன்று ஜூன் 7, சனிக்கிழமை – பிரான்சில் 25 மாவட்டங்கள் மின்னல் மழைக்காக மஞ்சள் எச்சரிக்கையில் உள்ளன என  Météo-Franceஅறிவித்துள்ளது.

மேற்கு நோக்கிச் செல்கின்ற இரண்டு மழை மண்டலங்கள் நாட்டை கடந்துச் செல்லவுள்ளன. கடந்த சில நாட்களாக தென் Auvergne முதல் வட Rhône-Alpes வரை வெப்பமான ஈரமான காற்று நிலவி வருகிறது. இதுவே இந்தப் பெருமழைக்குக் காரணம்.

வெள்ளி இரவிலிருந்து சனிக்கிழமை காலையில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழையும், சில இடங்களில் பெரும் ஆலங்கட்டி மழையும்(grêle) பதிவாகியுள்ளன.

மஞ்சள் எச்சரிக்கையிலுள்ள மாவட்ங்கள்

Paris, Seine-et-Marne, Yvelines, Somme, Essonne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne, Val-d'Oise, Oise, Aisne, Ardèche, Ardennes, Doubs, Drôme, Eure, Jura, Lozère, Marne, Meurthe-et-Moselle, Meuse, Moselle, Nord, Saône-et-Loire, Seine-Maritime.

மேலும் 7 மாவட்டங்கள், செம்மஞ்சள் எச்சரிக்கையிலும் உள்ளன, அதிக மழை மற்றும் பெரிய ஆலங்கட்டி மழைக்கும் பெரும் வாய்ப்பு உள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்