Paristamil Navigation Paristamil advert login

மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: பஞ்சாப் அரசு உத்தரவு

மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: பஞ்சாப் அரசு உத்தரவு

9 வைகாசி 2025 வெள்ளி 07:34 | பார்வைகள் : 3876


இந்தியா பாகிஸ்தான் இடையே தொடர் தாக்குதல் நடந்து வரும் நிலையில், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என, பஞ்சாப் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து பஞ்சாப் அரசு கூறியுள்ளதாவது: மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். வீட்டின் ஜன்னலை விட்டு விலகி இருக்க வேண்டும். விளக்குகளை எரிய வைக்க வேண்டாம். சைரன் அடித்தவுடன் செய்திகளை . மக்கள் அச்சப்பட தேவை இல்லை. ஆயுதப்படைகள் பணியில் உள்ளன. மக்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளது.

பாகிஸ்தானுடன் 532 கி.மீ., எல்லையை பஞ்சாப் பகிர்ந்து கொண்டுள்ளது. ஆறு எல்லை மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அனைத்து போலீசாரின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்