மீண்டும் இணையும் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா கூட்டணி?
8 வைகாசி 2025 வியாழன் 15:52 | பார்வைகள் : 8448
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் தற்போது கிங்டம் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. வருகின்ற மே 30 அன்று இப்படம் திரைக்கு வர தயாராகி வருகிறது. அதே சமயம் நடிகை ராஷ்மிகா, தென்னிந்திய திரை உலகில் ட்ரெண்டிங் நடிகையாக வலம் வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து ஏற்கனவே கீத கோவிந்தம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவின் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருந்தது. அதைத்தொடர்ந்து இருவரும் டியர் காம்ரேட் எனும் படத்திலும் நடித்திருந்தனர். இது தவிர இருவரும் காதலித்து வருவதாகவும், பல இடங்களுக்கு டேட் செல்வதாகவும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இருப்பினும் இருவருமே இதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் மறைமுகமாக கூறி வருவதால் ரசிகர்களுக்கு விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவின் காதல் குறித்து குழப்பங்கள் இருக்கிறது.
இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து மூன்றாவது முறையாக புதிய படத்தில் நடிக்க உள்ளார்களாம். அதாவது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஷியாம் சிங்கா ராய் படத்தின் இயக்குனர் ராகுல் சங்கரித்யன் இயக்கும் புதிய படத்தில் இருவரும் இணைந்து நடிக்க உள்ளார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த படமானது பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட இருப்பதாகவும் அடுத்த மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது. எனவே விரைவில் படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan