பாடசாலைத் துன்புறுத்தல் - மோதல் - பெற்றோர் கடமை!!
8 வைகாசி 2025 வியாழன் 11:47 | பார்வைகள் : 5033
கொலேஜ் மற்றும் லிசேக்களில், சகமாணவர்களால் துன்புறுத்தலிற்கு (harcèlement)) உள்ளாகி மிகவும் விபரீதமான தற்கொலைகள் வரை தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த விடயத்தில் மிகவும் இறுக்கமான முடிவுகளை முன்னாள் கல்வியமைச்சர் கப்பரியல் அத்தால் எடுத்திருந்தார்.
அதில் ஒரு சம்பவமாக Saint-Tropez (Var) இலிருக்கும் Lycée du Golfe இல் இரண்டு மாணவர்கள் கடுமையான துன்புறுத்தலை வேறொரு மாணவர் மீது மேற்கொணடமையால், கப்ரியல் அத்தாலின் ஆணையின் பேரில், இரு மாணவர்களும் நிரந்தரமாக லிசேயை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
ஆனால் முன்னாள் முதலமைச்சரும், இந்நாள் கல்வியமைச்சருமான எலிசபெத் போர்ன் அந்த மாணவர்களை மீண்டும அதே லிசேயில் சேர்க்க அனுமதி அளித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த கப்ரியல் அத்தால் தனது இன்ஸ்டா கிராம் தளத்தில் மிகத் தீவிரமான எதிர்ப்பைக் காட்டியுள்ளார்.
«துன்புறத்தல் என்பது மிகவும் பாரதூரமான விளைவகளை ஏற்படுத்தும். துன்புறுத்தியவரகள் தான வெளியேற்றப்படல் வேண்டும். துன்புறுத்தப்பட்டவன் அல்ல. அமைச்சரின் முடிவு மோசமானது»
எனத் தெரிவித்துள்ளார்.
இதை எப்படி கையாள்வது என்பது தமக்குத் தெரியும் எனவும் கப்ரியல் அத்தால் சொல்லித்தரத் தேவையில்லை எனவும் எலிசபெத் போர்ன் தெரிவித்துள்ளார்.
கப்ரியல் அத்தால் காலத்தில் தொடங்கி இப்பொழுதும் நடமுறையில் இருக்கும், பாடசாலைகளில் துன்புறுத்தல் நடந்தால் உடனடியாகத் தெரிவிக்கும்படி 3020 என்ற இலக்கம் வழங்கப்பட்டுள்ளது.

பிள்ளைகள் பாடசாலைகளில் துன்புறத்தல் ஏற்பட்டுள்ளது என வந்து சொன்னால் அவர்களைப் புரிந்து கொண்டு பெற்றோர்களும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கத் தயங்கள் கூடாது.
மீண்டும் பாடசாலைத் துன்புறுத்தல்களை உடனடியாக அறிவிக்க 3020 என்ற இலக்கத்தை உபயோகியுங்கள்!!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan