முதல் ATP மாஸ்டர்ஸ் பட்டம் வென்ற கேஸ்பர் ரூட்

5 வைகாசி 2025 திங்கள் 14:39 | பார்வைகள் : 115
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், நார்வேயின் கேஸ்பர் ரூட் முதல் ATP மாஸ்டர்ஸ் 1000 பட்டம் வென்றார்.
மாட்ரிட் ஓபன் 2025 டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி மனோலோ சாண்டனாவில் நடந்தது.
இதில் பிரித்தானியாவின் ஜேக் டிராப்பர் (Jack Draper) மற்றும் நார்வேயின் கேஸ்பர் ரூட் (Casper Ruud) மோதினர்.
அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஸ்பர் 7-5, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜேக் டிராப்பரை வீழ்த்தினார். இதன்மூலம் கேஸ்பர் தனது முதல் ATP மாஸ்டர்ஸ் 1000 பட்டத்தை கைப்பற்றினார்.
வெற்றி குறித்து பேசிய கேஸ்பர் ரூட், "நீண்ட காலத்திற்கு பின் இது கிடைத்துள்ளது. நான் இளமையாக இருந்தபோது கனவு கண்ட மிகப்பெரிய இலக்குகளில் ஒன்று. எனவே இன்று நான் அதைச் செய்த விதம், அதை அடைவது ஒரு நம்பமுடியாத உணர்வு. மேலும், இது ஒரு சிறந்த போட்டியாக இருந்தது" என்றார்.
மேலும் அவர், "அதிர்ஷ்டவசமாக, நான் மிகவும் சிறப்பாக விளையாடினேன். ஜேக் இப்போது எந்தத் தளத்திலும் ஒரு நம்பமுடியாத வீரராக மாறிவிட்டார்...இது எனக்கு மிகவும் பெரிய ஊக்கமளிக்கிறது, மேலும் நான் அதைத் தொடர விரும்புகிறேன்" என தெரிவித்தார்.