இலங்கை வந்தடைந்த நியூஸிலாந்து றக்பி அணியினர்

1 வைகாசி 2025 வியாழன் 09:43 | பார்வைகள் : 2574
இலங்கை றக்பி வரலாற்றில் ஒரு மைல்கல் சாதனையை பதிக்கும் வகையில் நியூஸிலாந்தின் றக்பி அணி ஒன்று புதன்கிழமை (30) இரவு இலங்கை வந்தடைந்துள்ளது.
நியூஸிலாந்து றக்பியில் 2024 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட 85 கிலோ கிராம் எடைக்குட்பட்ட வீரர்களைக் கொண்ட நியூஸிலாந்து அணியே இங்கு வருகை தந்து இரண்டு போட்டிகளில் இலங்கையை எதிர்த்தாடவுள்ளது.
முதலாவது போட்டி கண்டி நித்தவளை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை 04ஆம் திகதியும் இரண்டாவது போட்டி கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் எதிர்வரும் 11ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.
நியூஸிலாந்து (All Blacks) அணி ஒன்று இலங்கைக்கு வருகை தந்திருப்பது 118 வருடங்களின் பின்னர் இதுவே முதல் தடவையாகும்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025