Paristamil Navigation Paristamil advert login

IPL 2025; அறிமுக போட்டியிலேயே மோசமான சாதனை படைத்த கரீம் ஜனத்

IPL 2025; அறிமுக போட்டியிலேயே மோசமான சாதனை படைத்த கரீம் ஜனத்

30 சித்திரை 2025 புதன் 12:44 | பார்வைகள் : 112


ஐபிஎல் தொடரின் 47வது லீக் போட்டி, நேற்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இந்த போட்டியில், முதலில் துடுப்பாட்டம் ஆடிய குஜராத் அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்கள் எடுத்தது.

210 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 15.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து, 212 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி சார்பில், அதிரடியாக ஆடிய 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 38 பந்துகளில் 101 ஓட்டங்கள் எடுத்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
 
சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள், வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தை பாராட்டியுள்ளனர்.

இந்த போட்டியின் 10வது ஓவரை குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கரீம் ஜனத் வீச, அந்த ஓவரை எதிர்கொண்ட வைபவ் சூர்யவன்ஷி, அந்த ஓவரில் மட்டும் 30 ஓட்டங்கள் எடுப்பார்.

இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் கரீம் ஜனத் மோசமான சாதனையை படைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் வீரரான கரீம் ஜனத்திற்கு, இதுதான் முதல் ஐபிஎல் போட்டி ஆகும்.

இதன் மூலம் தனது அறிமுக போட்டியின் முதல் ஓவரில், அதிக ஓட்டங்கள் விட்டு கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை கரீம் ஜனத் படைத்துள்ளனர்.

முன்னதாக, வருண் சக்ரவர்த்தி 25 ஓட்டங்கள் கொடுத்திருந்ததே, மோசமான சாதனையாக இருந்தது. அதனை கரீம் ஜனத் முறியடித்துள்ளார்.          

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்