Paristamil Navigation Paristamil advert login

ஒரே இரவில் இரண்டு வெவ்வேறு கொலைச்சம்பவங்கள்!!

ஒரே இரவில் இரண்டு வெவ்வேறு கொலைச்சம்பவங்கள்!!

25 வைகாசி 2025 ஞாயிறு 13:36 | பார்வைகள் : 433


நேற்று மே 24, சனிக்கிழமை இரவு இரண்டு இடங்களில் இடம்பெற்ற வெவ்வேறு தாக்குதல் சம்பவங்களில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

முதலாவது சம்பவம் Nice (Alpes-Maritimes) நகரில் இடம்பெற்றுள்ளது. நள்ளிரவு 12.30 மணி அளவில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் Avenue de la Méditerranée வீதியில் உள்ள வீடொன்றுக்கு அழைக்கப்பட்டனர். அங்கு நபர் ஒருவர் கழுத்து துண்டிக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. எவரும் கைது செய்யப்படவில்லை.
***

இரண்டாவது சம்பவம் Dijon (Côte-d'Or) நகரில் இடம்பெற்றுள்ளது.   Chenôve பகுதியில் நள்ளிரவு 1 மணி அளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 29 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.  சம்பவ இடத்தில் பத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சன்னங்களை கண்டெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகளை Dijon நகர காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்