நீஸ் - மின் மாற்றியில் தீ – 45,000 வீடுகள் பாதிப்பு! தொடரும் குற்றச் செயல்!!

25 வைகாசி 2025 ஞாயிறு 13:33 | பார்வைகள் : 237
நீஸ் நகரத்தின் மேற்குப் பகுதியில் உள்ள மூலன் (Moulins) பகுதியில், சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு காலை வரை ஒரு மின் மாற்றியில் ஏற்பட்ட தீயால் 45,000 வீடுகள் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டன. நகரமே புகார் கொடுக்கப் போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ தானாக ஏற்பட்டதல்ல. வேண்டுமென்றே செய்யப்பட்ட குற்றச் செயல் என மாவட்டச் சட்டமா அதிபர் டமியன் மார்த்தினெல்லி (Damien Martinelli) தெரிவித்துள்ளார். மின் மாற்றியின் கதவு உடைக்கப்பட்ட ஆதாரங்கள் காணப்பட்டுள்ளதாக காவல்துறைக்தெரிவித்துள்ளது.
தீ சனிக்கிழமை இரவு நீஸ் நகரத்தின் Paul Montel சாலையில் உள்ள மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 45,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது, மற்றும் நீஸ் நகரத்தின் டிராம் சேவைகளும் முற்றாகப் பாதிக்கப்பட்டது.
இது அமைப்பு சேர்ந்த குழுவால் செய்யபட்ட தீவைத்து சேதப்படுத்தும் குற்றமாக காவற்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின் நிலையத்தின் கதவு உடைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். நகர துணை முதல்வர், நகரின் மின் உபகரணங்களுக்கு கூடுதல் காவல் ஏற்பாடு செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதே போல் நேற்று அல்ப்ஸ் மரித்திம் பகுதிகளில் உள்ள மின்சார உபகரணங்கள் மீது சேதம் செய்யப்பட்டது. இதில் ஒரு உயர அழுத்த மின்நிலை தீயிட்டு எரிக்கப்பட்டிருந்தது. மின் தூண்கள் வெட்டப்பட்டது. இதனால், 160,000 வீடுகள் பல மணி நேரம் மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டன – குறிப்பாக கான் நகரத்தில், திரைப்பட விழா நடந்து கொண்டிருந்தபோது இந்தக் குற்றச் செயல் நடாத்தப்பட்டுள்ளது.
இப்படியான குற்றச் செயல்கள் புதிதாக பரவ ஆரம்பித்துள்ளமை காவற்துறையினரிற்கு பெரும் வேலையைக் கொடுத்துள்ளன. சிறைத் தாக்குதலைத் தொடர்ந்து தற்போது மின்சாரத் தாக்குதல்கள் ஆரம்பமாகி உள்ளன.