ரஷ்யாவின் மிருகத்தனத்தை அழுத்தமில்லாமல் நிறுத்த முடியாது -ஜெலென்ஸ்கி

25 வைகாசி 2025 ஞாயிறு 13:28 | பார்வைகள் : 294
சர்வதேச தலைவர்கள் ரஷ்யா மீது தங்கள் அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா நடத்திய இரண்டாவது பாரிய வான்வழித் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
சமீபத்திய ரஷ்ய தாக்குதல்களில் சைட்டோமிரின் வடமேற்குப் பகுதியில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் 8,12 மற்றும் 17 வயதுடைய மூன்று குழந்தைகள் அடங்குவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) தனது கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் ஞாயிற்றுக்கிழமை, சர்வதேசத் தலைவர்கள் ரஷ்யா மீது தங்கள் அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெலென்ஸ்கி கூறுகையில், "ரஷ்யத் தலைமையின் மீது உண்மையிலேயே வலுவான அழுத்தம் இல்லாமல், இந்த மிருகத்தனத்தை நிறுத்த முடியாது. தடைகள் நிச்சயமாக உதவும். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அமைதியை நாடுபவர்கள் அனைவரும் மாஸ்கோவை போரை நிறுத்த தங்கள் உறுதியை காட்ட வேண்டும்" என அழைப்பு விடுத்தார்.
இதற்கிடையில், மாஸ்கோவை நோக்கி பறந்து கொண்டிருந்த ஒரு டசன் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.