அல்ப்ஸ் மரித்திம் மாகாணத்தில் மின்தடை - தீவிரவாதம் காரணமா?

25 வைகாசி 2025 ஞாயிறு 12:33 | பார்வைகள் : 380
நேற்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் ALPES-MARITIMES பகுதியில் பெரிய அளவிலான மின்தடை ஏற்பட்டது. 1,60,000 வீடுகள் மின்விநியோகம் இழந்தன. மின்விநியோகம் மாலை 4:30 மணியளவில் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது.
தனெரோன் (Tanneron) என்ற இடத்தில் உள்ள மின் வழங்கல் நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டதால் இந்த கான் உட்பட மாகாணம் முழுவதும் மின்தடை ஏற்பட்டது. வைத்தியசலைகள் மின்உற்பத்தி இயந்திரங்கள் மூலம் தற்காலிகமாக இயங்கின.
வில்லனெவ்-லூவே (Villeneuve-Loubet) பகுதியில் மின் தொங்கு கோபுரம் விழுந்திருந்தது. ஆனால் இது வேண்டுமென்றே அறுத்து வீழ்த்தப்பட்டதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன.
இதனால் தொலைபேசிச் சேவைகள் துண்டிக்கப்பட்டன. சாலை சமிக்ஞை விளக்குகள் முழுவதுமாக செயழிழந்தன. மொத்தமாக மாகாணமே செயழிழந்து இருந்தது.
இது ஒரு பயங்கரவாத்ச் செயலின் காரணமாக ஏற்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.