நாள் ஒன்றுக்கு 105 சிறுவர்கள் காணாமல் போகின்றனர்.. !!

25 வைகாசி 2025 ஞாயிறு 09:22 | பார்வைகள் : 864
பிரான்சில் கடந்த 2024 ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 105 சிறுவர்கள் வீதம் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பிரான்சில் கடந்த 2024 ஆம் ஆண்டில் 38,477 சிறுவர்கள் ’குறைந்த அளவு நேரமேனும்’ காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 105 சிறுவர்கள் வீதம் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 5% சதவீடமானவர்கள் மட்டுமே கடத்தப்பட்டவர்கள் எனவும், ஏனையவர்கள் வீட்டை விட்டு வெளியேறி ஓடிச்சென்றவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போனவர்களில் 38% சதவீதமானவர்கள் மட்டுமே 15 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
27% சதவீதமான சிறுவர்கள் குடும்ப வன்முறை, பெற்றோர் மோதல் போன்ற காரணங்களினால் வீட்டை விட்டு ஓடுவதாக தெரிவிக்கப்படுகிறது.