காசாவில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதல- 80 பேர் பலி

24 வைகாசி 2025 சனி 17:56 | பார்வைகள் : 1389
காசாவில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே ஓராண்டுக்கு மேலாக மோதல் நீடித்த நிலையில், உலக நாடுகளின் தலையீட்டால் கடந்த ஜனவரியில் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஆறு வார கால போர் நிறுத்தத்தின் போது, இரு தரப்பிலும் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இரண்டாம் கட்ட போர் நிறுத்த பேச்சின் போது, இஸ்ரேல் விதித்த நிபந்தனைகளை ஏற்க ஹமாஸ் தரப்பு மறுத்தது.
இதையடுத்து, காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 53,762 பேர் உயிரிழந்துள்ளனர். 1,22,197 பேர் காயமடைந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்தது.
அதேநேரத்தில் அரசு ஆதரவு பெற்ற மீடியா ஒன்றில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61,700 ஐ தாண்டும் எனக்கூறியுள்ளது.
இந்நிலையில்,காசாவின் வடக்குப்பகுதியில் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி உள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1