ஐரோப்பிய தயாரிப்புகள் மீது 50% சுங்கவரி: டிரம்பின் கடும் முடிவு!

24 வைகாசி 2025 சனி 14:33 | பார்வைகள் : 520
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கு விருப்பமில்லை என்றும் மேலும் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவை பாதிக்கவே உருவாக்கப்பட்டது என்றும் மே 23 வெள்ளிக்கிழமை அன்று குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போது ஐரோப்பிய தயாரிப்புகளுக்கு 50% சுங்கவரி விதிக்கப்படுவதாகவும், இந்தக் கட்டுப்பாடுகள் ஜூன் 1 முதல் அமுலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“இந்த விளையாட்டை நான் அறிந்த வழியில் விளையாட நேரம் வந்துவிட்டது” எனவும் அவர் கூறியுள்ளார். டிரம்ப் இதுவரை நடத்திய பாதுகாப்பு சார்ந்த கொள்கை, பெரும்பாலும் கடும் மிரட்டல்களாகவே இருந்தாலும், சில நேரங்களில் அதிலிருந்து பின்வாங்கியுமுள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் இந்தப் புதிய மிரட்டல்களை கண்டித்துள்ளன. "இவை எதற்கும் உதவாது" என வெளிநாட்டு வர்த்தகதுறைக்கான பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் முந்தைய நிலைப்பாட்டையே தொடர்கிறோம் – பதற்றத்தைக் குறைப்பதே நம்முடைய நோக்கம் ஆனால் பதிலளிக்கவும் தயாராக இருக்கிறோம்" என்று லோரண்ட் செயின்ட்-மார்டின் (Laurent Saint-Martin) தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.