Paristamil Navigation Paristamil advert login

தங்குமிட அனுமதி பெறுவது எப்படி? சிறீலங்கா பணியாளரால் சட்டமாற்றம்!

தங்குமிட அனுமதி பெறுவது எப்படி? சிறீலங்கா பணியாளரால் சட்டமாற்றம்!

24 வைகாசி 2025 சனி 11:03 | பார்வைகள் : 3892


உணவகத்து துறையில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் சட்டபூர்வமாக பணியாற்றலாம் என்ற புதிய முடிவால் உணவக உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

2025 மே 22 அன்று வெளியான வேலைவாய்ப்பு குறைவுள்ள தொழில்கள் (métiers en tension) பட்டியலில் உணவகத் துறையும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதில் இடம்பெறுபவர்கள் (சமையல்காரர்கள், பரிமாறுபவர்கள், சமையல் உதவியாளர்கள்) 12 மாத ஊதிய அறிக்கைகள் மற்றும் 3 ஆண்டுகளாக பிரான்சில் வசிப்பதையும் உறுதிசெய்தால் தங்குமிட அனுமதி (titre de séjour) பெறலாம்.

உணவகம் உரிமையாளர்களின் எதிர்வினை:

Laurent Frechet (Paris – Le Zango)  «இது நிவாரணம். வெளிநாட்டுத் தொழிலாளர்களின்றி நாங்கள் இயங்க முடியாது»  என்று தெரிவித்த இவர் தனது 22 ஆண்டுகளின் அனுபவத்தில் 6–7 பணியாளர்களுக்கு சட்டமுறையான பணி அனுமதியை பெற்றுத்தந்துள்ளார்.

ஒரு சிறீலங்கா பணியாளர் தவறான ஆவணங்களுடன் இருந்ததை அம்பலப்படுத்தி பின்னர் அவரை சட்டபூர்வமாக்கி, இன்னும் வேலைக்கு வைத்துள்ளார்.

Sangare Lamine  (மாலியில் இருந்து வந்தவர்) 2005ல் துப்புரவாளராக வேலை செய்து, பின்னர் சமையல் ஆணையாளராக உயர்ந்தார். Laurent Frechet எனக்கு வாய்ப்பு கொடுத்தார்,' என பெருமையுடன் கூறுகிறார்.

சட்ட ரீதியான முக்கியத்துவம்

சட்டவிரோதமாக உள்ள ஒருவரை வேலைக்கு வைத்தால், 30,000 அபராதம் மற்றும் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கலாம். புதிய பட்டியல் இந்த அபாயத்தைத் தவிர்க்க உதவுகின்றது.

உணவக துறையில் 2025ல் 336,000 வேலைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதில் சமையல் முதல் துப்பரவு பணிக்கான வாய்ப்புகள் உள்ளன. அதில் பாதி பணிக்கான தேடல் கடினமாகும் எனவும் கணிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் பரிசிலிருலுந்து வெகு தொலைவில் வெலைக்கு ஆட்கள்  கிடைப்பது கடினமாக உள்ளது.

புதிய பட்டியல் ஒரு முன்னேற்றம் என்றாலும், முழுமையான தீர்வாக இல்லை. ஆனால், இது சட்டவிரோதப் பணியாளர்களுக்கு உரிய உரிமைகளை வழங்கும் முக்கிய அடி என்றும் உணவகத்துறை உரிமையாளர்கள் கருதுகின்றனர்.

 

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்