உழவு இயந்திரங்களுடன் விவசாயிகள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில்...!!

24 வைகாசி 2025 சனி 10:13 | பார்வைகள் : 268
இல்-து-பிரான்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த விவசாயிகள், உழவு இயந்திரங்களுடன் சாலை மறிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
உழவு இயந்திரங்களை வீதிகளில் மெதுவாக செலுத்தி, போக்குவரத்தை முடக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். மே 26, திங்கட்கிழமை காலை முதல் இந்த ஆர்ப்பாட்டம் இல்-து-பிரான்சின் பல்வேறு நகரங்களில் இடம்பெற உள்ளது.
● Essonne மாவட்டத்தை ஊடறுக்கு N118 சாலையிலும்,
● Yvelines மாவட்டத்தை ஊடறுக்கு A12 நெடுஞ்சாலையிலும்,
● Seine-et-Marne மாவட்டத்தின் சில பகுதிகளில் உள்ள வீதிகளிலும்
இந்த ஆர்ப்பாட்டம் காலை 6 மணியில் இருந்து இடம்பெற உள்ளன.
அத்தோடு பரிசில் பாராளுமன்றம் முன்பாகவும் அவர்கள் உழவு இயந்திரங்களோடு வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.