Paristamil Navigation Paristamil advert login

தொலைபேசி விளம்பர அழைப்புகளுக்கும் - பயனாளர்களின் மோசடிகளிற்கும் - முற்றுப்புள்ளி!!

தொலைபேசி விளம்பர அழைப்புகளுக்கும் - பயனாளர்களின் மோசடிகளிற்கும் - முற்றுப்புள்ளி!!

22 வைகாசி 2025 வியாழன் 05:10 | பார்வைகள் : 7519


2026 ஓகஸ்டில் அமலுக்கு வரும் புதிய சட்டம், நுகர்வோர் முன் அனுமதி இல்லாத தொலைபேசியில் விளம்பர அழைப்புகளைத் தடை செய்யும்.

முன் அனுமதி கட்டாயம்

நிறுவனங்கள் நுகர்வோரிடம் தொலைபேசியில் விளம்பரம் செய்ய முன்னதாக, அவர்களின் தெளிவான, சுய விருப்பமுள்ள மற்றும் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். மறுத்தால் நிறுத்த வேண்டும்.
தடையை மீறினால், நிறுவனமே அனுமதி இருப்பதை நிரூபிக்க வேண்டும். ஏற்கனவே நிலுவையில் உள்ள ஒப்பந்தத்தின் கீழ் ஏற்படும் தொடர்புக்கு இது பொருந்தாது.

பொது மக்களின் கண்ணோட்டம்

UFC-Que Choisir கணக்கீட்டின்படி, 97சதவீத மக்கள் தொலைபேசி விளம்பர அழைப்புகளால் பெரிதும் இடையூற்றிற்கு ஆளாகின்றார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள், குறிப்பாக மூத்தோர் மற்றும் நுட்ப அறிவில்லாதவர்கள், மோசடி மற்றும் திருட்டுக்கு இழுக்கப்படுகிறார்கள்.

Bloctel வரம்புகள்

தற்போதைய  'Bloctel' அமைப்பு, வரம்புகள் உள்ளதால் செயல்திறன் அற்றதாகக் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

மின்னணு விளம்பரத் தடையும்

மின்னஞ்சல், எஸ்எம்எஸ், சமூக ஊடகங்கள் மூலம் நடைமுறையில் உள்ள வீட்டு நவீனமயமாக்கல் மற்றும் மாற்றங்கள் போன்ற விளம்பரங்களும் தடைசெய்யப்படும்.

பயனாளர்களின் மோசடிகளுக்கும் கட்டுப்பாடு

இந்த சட்டம் அரசுத் துணைமோசடிகளை எதிர்த்து நடவடிக்கை எடுக்க பலமான உரிமைகளை அரசுக்கு அளிக்கிறது.
மின்சாரம் மற்றும் எரிவாயு கணக்கீட்டுக் கருவிகளில் மோசடி செய்து பயன்படுத்தினால், நேரடியாக கடுமையான தண்டனை வழங்கப்படும்.

 

மோசடிக்கான நிரூபனங்கள் இருந்தால், தண்டனைகளுடன், அவர்களிற்கான  அரசு உதவிகளை (CAF etc..) மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தவும் அரசிற்கு அனுமதி உள்ளது.

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்