Paristamil Navigation Paristamil advert login

Lidl கடைகளில் விற்பனையான மாமிசப் பொருட்களில் பக்டீரியா!

Lidl கடைகளில் விற்பனையான மாமிசப் பொருட்களில் பக்டீரியா!

21 வைகாசி 2025 புதன் 21:24 | பார்வைகள் : 5431


Lidl கடைகளில் விற்பனையான Saint Alby நிறுவனத்தின் 180  கிராம் எடையுள்ள லார்டன்கள் (des lardons), சால்மொனெல்லா (salmonelle) பக்டீரியா இருந்ததால் திரும்ப பெறப்படுகின்றன. 

மே 9 முதல் 17 வரை விற்பனையான இந்த தயாரிப்பை வாங்கியவர்கள் அதை உபயோகிக்காமல், கடைக்கு திருப்பி வழங்குமாறு அரசு தளம் Rappel Conso புதன்கிழமை தெரிவித்துள்ளது. மாமிச உணவுக்கான பணம் திருப்பி வழங்கப்படும். இந்நடைமுறை ஜூன் 4ஆம் திகதியோடு முடிவடைகிறது.

சால்மொனெல்லோஸ் (La salmonellose) நோய் வயிற்றுப்போக்கு, குமட்டல், வயிற்றுவலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். இது பாதிக்கப்பட்ட உணவை சமைக்காமல் உண்ணும் போது அதிக பாதிப்புக்கள் ஏற்படுகின்றது. 

பொதுமக்கள் இந்த தயாரிப்புகளை உபயோகிப்பதிலிருந்து தவிர்த்து, உடனே நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்