வார் மாகாணத்தில் மூவரை கொன்ற கடும் இடியுடன் கூடிய மழை – காரணம் என்ன?

21 வைகாசி 2025 புதன் 05:30 | பார்வைகள் : 469
2025 மே 20, செவ்வாய்க்கிழமை அன்று வார் (Var) பகுதியில் நிகழ்ந்த கடும் புயலால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர், வீடுகள், சாலைகள் மற்றும் மின்னணு உள்கட்டமைப்புகள் பெரிதும் சேதமடைந்துள்ளன.
மழையின் விபரீதத்திற்கான காரணம்:
இது ஒரு "cold drop" எனப்படும் குளிர் காற்று இடைவெளியின் தாக்கம்.
இது ஸ்பெயினில் இருந்து வந்து, துரிதமாக கிழக்கு நோக்கி நகர்ந்து, வெப்பமான காற்றுடன் சந்திக்கும்போது கடும் மழையை உருவாக்கியுள்ளது.
மழை அதிகம் விழுந்த பகுதிகள்:
விதோபோன் (Vidauban) – 185 மில்லிமீறறர் (மே மாத சாதாரண மழையின் நான்கு மடங்கு)
லவாண்தூ (Le Lavandou) – 80 முதல் 100 மில்லிமீறறர்
பொதுவாகவே இப்பகுதி இது போன்ற மழைக்கு உட்படக்கூடியது, குறிப்பாக மலைச் சரிவுகளால் தண்ணீர் வேகமாக கடலுக்கு செல்லும்.
சில சாலைகள் முற்றிலும் அழிந்துள்ளன. மற்றும் நூற்றுக்கணக்கான வீடுகள் மின் இணைப்பு இன்றி பெரும் துன்பத்திற்கு உள்ளாகி உள்ளன.
இது ஒரு இயற்கை நிகழ்வாக இருந்தாலும், காலநிலை மாற்றம் இதுபோன்ற நிகழ்வுகளின் தீவிரத்தையும் அடிக்கடி நிகழ்வதையும் அதிகரிக்கக்கூடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.