தெளிவான அச்சுறுத்தல்- முஸ்லீம் சகோதரத்துவ இயக்கத்தை குறிவைக்கும் புதுப் புகார் அறிக்கை!

21 வைகாசி 2025 புதன் 04:00 | பார்வைகள் : 759
2025 மே 14 அன்று பாரிஸ் புறநகரான நோந்தேரில், இமானுவேல் மக்ரோன் மற்றும் பல முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்திற்குப் பின், இன்று 2025 மே 21 புதன்கிழமை, தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கான ஆலோசனை மன்றக் கூட்டத்தின் முடிவில் முஸ்லீம் சகோதரத்துவ இயக்கம் (LES FRÈRES MUSULMANS)தொடர்பான ஒரு முக்கியமான அறிக்கை வெளியிடப்படும்.
இக் கூட்டத்தில், பிரதமர் பிரான்சுவா பய்ரூ, உள்துறை அமைச்சர் ப்ரூனோ ரத்தையோ, பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்தியன் லுகோர்னு, வெளிநாட்டு அமைச்சர் ஜோன் நோயல் பாரோ, மற்றும் பொருளாதார அமைச்சர் எரிக் லொம்பார் ஆகியோர் பங்கேற்கின்றனர
'மிகவும் தெளிவான ஒரு அச்சுறுத்தல்', என்று உள்துறை அமைச்சர் ப்ரூனோ ரத்தையோ இந்த அமைப்பைக் கூறியுள்ளார். மெதுவாக பரவும் இஸ்லாமிய வாதம் எனப்படும் இந்த இயக்கம், விளையாட்டு, கலாசாரம், சமூக அமைப்புகள் போன்றவற்றுள் ஊடுருவ முயல்கின்றது.
'இவற்றின் இறுதி நோக்கம், பிரெஞ்சு சமுதாயத்தை சரியா சட்டத்திற்குள் வீழ்த்துவதுதான்' எனக் கூறப்படுகிறது. இது மாநிலத்தின் மதிப்பீடுகளுக்கும், தேசிய ஒற்றுமைக்கும் எதிரானது என உள்துறை அமைச்சர் வலியுத்தி உள்ளார்.
அறிக்கையின் உள்ளடக்கம்:
முஸ்லீம் சகோதரத்துவ இயக்கத்தின் நிதி வழிகள், அமைப்புகள், மற்றும் தாக்கம் செலுத்தும் வழிகளைக் கொண்டு இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இயக்கம் 1928ல் எகிப்தில் உருவானது, மற்றும் இன்று பல ஐரோப்பிய நாடுகளில் தனது செயற்பாடுகளை மையப்படுத்தியுள்ளது.
சவூதி அரேபியா, எகிப்து மற்றும் சமீபத்தில் ஜோர்டான் ஆகிய நாடுகளில் இவ்வியக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸில் பல நகரங்களில் 'முஸ்லீம் சகோதரத்துவம் சார்ந்த சூழல்' (écosystème) காணப்படுகின்றது, இது கல்வி, தன்னார்வ அமைப்புகள் மற்றும் பங்களிப்பு அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டது.
"Europe Trust" எனும் லண்டனில் உள்ள நிதி நிறுவனம், சகோதரத்துவ இயக்கத்துடன் தொடர்புடையதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையில் கூறப்படுவது போல, சட்டத்தின் எல்லையை கடக்காத வகையில் திட்டமிடப்பட்ட ஊடுருவல்களால், இவர்களை சட்ட ரீதியாக கைது செய்வது கடினம்.
அரசாங்கம் வலியுறுத்துவது இஸ்லாத்தை எதிர்த்து அல்ல. ஆனால் தீவிரவாத இஸ்லாமியவாதத்தை எதிர்க்கின்றது
என அறிக்கை சுட்டிக் காட்டி உள்ளது.
உள்துறை அமைச்சர் ரத்தையோ இதுவரை தீவிர இஸ்லாமியவாதத்திற்கு எதிரான கடுமையான அணுகுமுறையை மேற்கொண்டு வருகிறார், மேலும் அவர் 2027இன் ஜனாதிபதித் தேர்தலை நோக்கியும் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக வைக்கிறார்.