Paristamil Navigation Paristamil advert login

பரிசில் சிகரெட் எச்சங்களை தூக்கி எறிவதை எதிர்த்து 10 முக்கிய நடவடிக்கைகள்

பரிசில் சிகரெட் எச்சங்களை தூக்கி எறிவதை எதிர்த்து 10 முக்கிய நடவடிக்கைகள்

21 வைகாசி 2025 புதன் 00:20 | பார்வைகள் : 455


சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கும், நகர சுத்தத்திற்கு பாதிப்பாக இருக்கும் சிகரெட் எச்சங்கள் (அéபழவள) பெரும் பிரச்சினையாக உள்ளது.

இந்தப் பிரச்சனையை எதிர்த்து பரிஸ் மாநகராட்சி 10 முக்கிய நடவடிக்கைகள் கொண்ட ஒரு முழுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

350 தொன்னிற்கும் மேல் சிகரட் எச்சங்கள் ஆண்டுதோறும் பரிஸ் நகரில் சேகரிக்கப்படுகின்றன

4 முதல் 5 மில்லியன் சிகரட் எச்சங்கள் தினசரி தூக்கி எறியப்படுகின்றன.
சிகரட் எச்சங்களால் 500 லிட்டர் தண்ணீர் மாசடைகிறது.

இதனால் நகர சுத்தத்திற்கு வருடம் ஒன்றுக்கு 10 மில்லியன் யூரோ செலவாகிறது.

இதனைத் தடுக்க முக்கிய 10 நடவடிக்கைகள்:

1- 400,000 சில்லறை சிகரெட் பாக்கெட் சிந்தைகளுக்கான சிகரட் தூளைக் கொட்டுவதற்கும் சிகரட்  எச்சங்களையும் போடக்கூடிய காற்சட்டைப் பைக்குள் கொண்டு செல்லக்கூடிய சாம்பல் தட்டுகள் (CENDRIERS)) இலவச விநியோகம். 700 சிகரெட் விற்கும் Tabac களிலும், பொது இடங்களில் நடத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்வுகளிலும் இவை வழங்கப்படும்.

2- 'இங்கே செய்ன் நதி துவங்குகிறது' என்று குறிப்பிடும் 1,000 உலோகக் குறியீடுகள் வைக்கப்படும். இது கழிவுநீர் வழித்தடங்களிற்கு அருகில், முக்கியமான தெருக்களில் விழிப்புணர்வுக்காக நிறுவப்படும்.

3- உணவகங்கள் மற்றும் அவற்றின் வெளியில் இருந்து சாப்பிடும் பகுதிகள் மற்றும் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வணிக நிறுவனங்களிலும் சாம்பல் தட்டுகள் நிறுவப்படல் வேண்டும். மொட்டை மாடி உள்ள நிறுவனங்கள் சாம்பல் தட்டுக்களை நிறுவ வேண்டிய கட்டயாத்தினை பரிஸ் மாநகரசபை வலியுறுத்தி உள்ளது.

4- தெரு குப்பைத்தொட்டிகளிற்காக புதிய துணைக்கருவி2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள், பிரபலமான rue Cybel குப்பைத் தொட்டியில் ஏற்கனவே தீயணைப்பான்கள் பொருத்தப்பட்டதுபோல்  பழைய தீயணைப்பான்களிற்கு கூடுதலாக, 4,600 புதிய சிகரட் தீயணைப்பானகள்; என்ற புத்தம் புதிய துணைப் பொருளுடன் மாற்றியமைக்கப்படும்.

5- இந்தப் பெரிய சுற்றுச்சூழல் சவாலை எதிர்கொள்ளும் பாரிஸ் நகரம், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு நிகழ்வுகளுக்கான அதன் சாசனத்தை முறையாக நினைவுபடுத்தும்; சாம்பல் தட்டுகளை நிறுவுவதற்கு வசதி, தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. நிகழ்வுகளில் சாம்பல் தட்டு வசதிகள் கட்டாயம் செய்யப்படல் வேண்டும்.

6- மற்றொரு நடவடிக்கை என்னவென்றால், மாவட்ட மத்தி மற்றும் பொது இடங்களில் கணக்கெடுப்பு செய்து  சாம்பல் தட்டுகளை வழங்க முடியும். இதனால் தனிநபர்கள் மற்றும் மக்கள் குழுவையும் அவர்களின் நடத்தைகளை மாற்றி புதிய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும்.

7 - இளைய தலைமுறையிடம் சிக்கனமான பழக்கங்களை ஊக்குவிக்கும் திட்டம். இவை பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன. சமூகப் பங்கேற்புடன் நகர சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும்

8- சேகரிக்கப்பட்ட சிகரெட் துண்டுகளின் எண்ணிக்கையை அளவிட பைகள், கையுறைகள் போன்றவற்றை குடியிருப்பாளர்களுக்கு வழங்குவதன் மூலம் எவ்வளவு சிகரட் எச்சங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடியும். துப்புரவுப் பணிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க பரிஸ் நகரம் உறுதிபூண்டுள்ளது.

9- ஒழுங்கு முறைகளை மீறி வீதியில் சிகரெட் எச்சங்களை வீதியில் எறிபவர்களிற்கு அபராதங்களை விதிப்பதன் மூலம் தடுக்க முடியும். 135 யூரோ அபராதத்துடன் காவல்துறை கண்காணிப்பும் தொடரும்.

10- புதிய முயற்சிகளை ஊக்குவிக்க பரிசீலனை செய்யப்படும். தனியார் அல்லது சமூக அமைப்புகளின் முயற்சிகள் வலுவாக இருந்தால், அவற்றிற்கு ஆதரவு அளிக்கப்படும்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்