Bonduelle coleslawஇல் உயிராபத்தை ஏற்படுத்தும் பக்டீரியா!

20 வைகாசி 2025 செவ்வாய் 14:03 | பார்வைகள் : 754
Bonduelle நிறுவனத்தின் 320 கிராம் 3083681081695 மற்றும் 512707097139 தயாரிப்பு எண்களை கொண்ட coleslaw (வெள்ளை முட்டைக்கோஸ், காரட், வெங்காயம் மற்றும் மென்மையான சோஸ்) உணவில் Listeria பக்டீரியா கண்டறியப்பட்டுள்ளதால், இதை உட்கொள்ள வேண்டாம் என்று மே 19 திங்கள் கிழமை Rappel Conso இணையதளம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது, .
இந்த உணவுப்பொருள் மே 9 முதல் மே 16 வரை Carrefour, Auchan, Monoprix உள்ளிட்ட பிரான்ஸின் பல கடைகளில் விற்கப்பட்டுள்ளது. Listeria பக்டீரியா listériose எனும் தீவிர நோயை ஏற்படுத்தும்; இதன் அறிகுறிகளான காய்ச்சல், தலைவலி மற்றும் தசை வலி போன்றன 8 வாரங்கள் வரை தாமதமாகவும் தோன்றலாம்.
நுகர்வோர் இந்தப் பொருளை உண்ணாமல், கடைக்கு திரும்ப கொண்டு சென்று பணம் பெற்றுக்கொள்ளுமாறு Rappel Conso பரிந்துரைக்கிறது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் தோன்றினால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
Bonduelle நிறுவனம் மற்றும் விற்பனையாளர்கள், உரிய நடவடிக்கைகளை எடுத்து, பாதிக்கப்பட்ட பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.