கடும் வெள்ளம் – உயிரிழப்பு - ஒருவர் காணவில்லை!

20 வைகாசி 2025 செவ்வாய் 13:57 | பார்வைகள் : 484
பிரான்ஸ் வார் (VAR) மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கி கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
சில இடங்களில் 250 mm மழை பதிவாகியுள்ளது.
வெள்ள நிலை காரணமாக லா மோல் (La Môle) ஆறு இரண்டு மணி நேரத்தில் 11 மீட்டர் உயரம் எட்டியது.
லவாண்து (Le Lavandou) பகுதியில் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இன்னும் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
200 தீயணைப்புப் படையினர் 50 இற்கும் மேற்பட்ட மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கவலியர் (Cavalière) பகுதி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, அங்கு பல்வேறு சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
இது அசையாத (stationnaire) வகை மழையாக இருக்கிறது, அதாவது ஒரு இடத்தில் நீண்ட நேரம் மழை பெய்து கொண்டிருப்பது.
இதுவே வெள்ளத்திற்கான முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
மாவட்ட ஆணையத்தின் எச்சரிக்கை!
தற்போதைய நிலைமை மாறக்கூடியது, மேலும் மழையும் வெள்ளமும் தொடரும் அபாயம் உள்ளது.
மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது முக்கியம். அத்தியாவசியத் தேவைகளன்றி, யாரும் வெளியே செல்லாமலிருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.