நீதிமன்றத்தில் இருந்து குற்றவாளி தப்பியோட்டம்!!

20 வைகாசி 2025 செவ்வாய் 12:57 | பார்வைகள் : 462
ஒரு 34 வயது மார்செய்யைச் சேர்நத நபர் காவற்துறையினரின் உயிரிற்கு ஆபத்து விளைவிக்கும் வகையில், அவர்களின் கட்டளையை மீறிய குற்றத்திற்காக நான்கு ஆண்டுகள் சிறைவாசத் தணடணை தூலோன் சட்டவியல் நீதிமன்றத்தினால் (Tribunal judiciaire de Toulon) வழங்கப்பட்டது.
இவர் ஒரு தொடர் குற்றவாளி ஆவார்.
அவருக்கு சிறைத்தண்டனை உடனடியாக வழங்கப்பட்டு (mandat de dépôt) La Farlède சிறைச்சாலைக்கு மாற்றப்பட உள்ள நிலையில், நீதிமன்ற காவல் அறையிலிருந்து அவர் தப்பியோடி உள்ளார்.
30 நிமிடங்கள் கழித்தே காவற்துறையினர் அவர் தப்பியோடியதை கவனித்துள்ளனர். எப்படி தப்பினார் என்பது இன்னும் தெரியவில்லை.
வழக்கமான தேடல் நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அவரை பிடிக்க தேடல் பிடியாணை (mandat de recherche) பிறப்பிக்கப்பட்டுள்ளது
இதனால் நாட்டின் எந்த பகுதியிலும் இவர் காவற்தறையினரால் கைது செய்யப்படலாம்.
இது நீதி மற்றும் காவல்துறையினரின் கவனக்குறைவு ஆகும்.
உங்கள் மாவட்டத்தில் யாராவது சந்தேகத்திற்கிடமான நபரைக் கண்டால், உடனடியாக காவற்துறையினரிடம் தகவல் தருமாறு காவற்துறையினர் கேட்டுள்ளனர்.