நெடுஞ்சாலைகளில் புதிய சிவப்புக் கோடுகள் - அர்த்தம் என்ன?

19 வைகாசி 2025 திங்கள் 14:32 | பார்வைகள் : 877
சில வாரங்களாக, லியோன் மற்றும் மார்செய்யை இணைக்கும் A7 நெடுஞ்சாலையில் ஒரு சிவப்பு கோடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய குறியீடு என்ன சொல்கிறது, அதை பின்பற்றாதால் என்ன அபாயம்?
வெள்ளை, மஞ்சள், இப்போது சிவப்பு, புது நிறம் ஒன்று பிரான்சின் சாலைகளில் இடம் பிடித்துள்ளது. லியோன் மற்றும் மார்செய்க்கு இடையில் உள்ள A7 நெடுஞ்சாலையில், சுமார் நான்கு கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு சிவப்பு கோடு, வெள்ளை கோட்டுக்கு இணையாக இழுக்கப்பட்டுள்ளது.
இந்த சிவப்பு கோடு, வாகனச்சாரதி பயிற்சி உரிமைச் சட்டத்தில் (Code de la route)) தற்போது இடம்பெறாவிட்டாலும், இது ஓட்டுனர்களுக்குச் எச்சரிக்கை அளிக்கும் வகையில் அமையும். சிவப்பு என்பது பொதுவாக அபாயம் அல்லது தடையைக் குறிக்கும் என்பதால், இது ஓட்டுநர்களின் கவனத்தை ஈர்த்து, கவனமாக வாகனம் செலுத்த தூண்டும் காரணியாக அமையலாம்.
ஏன் இந்த சிவப்பு கோடு?
இந்த பகுதியில் பல விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அதனால், Vinci Autoroutes இன் துணை நிறுவனம் utoroutes du Sud de la France (ASF), ஸ்பெயினின் அன்டலூசியாவில் உள்ள A-355 சாலையைப் போல, இந்தக் கோட்டைப் பயன்படுத்தி விபத்துகளை குறைக்க திட்டமிட்டுள்ளது.
A7 மட்டுமல்ல, A10 நெடுஞ்சாலையிலும் இந்த சிவப்பு கோடு கையாளப்படுகிறது.
பின்பற்றாமல் விட்டால் என்ன அபாயம்?
சிவப்பு கோட்டுடன் கூடிய பகுதியைத் தாண்டி செல்லும்போது
135 யூரோ அபராதம் விதிக்கப்படும்
அபராதம் அதிகரிக்குமானால் 750 யூரோ வரை செல்லலாம்
வாகனச் சாரதி உரிமத்தில் இருந்து 3 புள்ளிகள் குறைக்கப்படலாம்
இதனால், இது ஒரு தடுப்புத் தடமாக செயல்பட்டு, வாகனம் செலுத்தும்போது கவனக்குறைவுடன் இருப்பவர்களை, வீதிப் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற தூண்டுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ச்சியான பாதுகாப்பு முயற்சி
2024 ஆம் ஆண்டில் பிரான்ஸ் மையப் பகுதியில் மட்டும் 3,190 மரணங்கள் சாலையில் நிகழ்ந்துள்ளன (2023-இல் 3,167 மரணங்களுடன் ஒப்பிடுகையில் 0.7சதவீதம் அதிகரிப்பு).
இந்த சோதனைத் திட்டம் வெற்றிகரமாக இருந்தால், பிரான்ஸ் முழுவதும் விரிவுபடுத்தப்படும் வாய்ப்பு உள்ளது.