Choose France : €37 பில்லியன் யூரோக்கள் முதலீடு!!

19 வைகாசி 2025 திங்கள் 08:00 | பார்வைகள் : 584
இன்று மே 19, திங்கட்கிழமை இடம்பெற உள்ள ஒன்பதாவது Choose France மாநாட்டில் 20 பில்லியன் யூரோக்கள் முதலீடு பிரான்சுக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், கிட்டத்தட்ட 37 பில்லியன் யூரோக்கள் முதலீடு கொண்டுவரப்பட உள்ளதாக எலிசே தெரிவித்துள்ளது.
பொருளாதாரம், கனிமவளங்கள், டிஜிட்டல், தளவாடங்கள், சுற்றுலா போன்ற பல்வேறு துறைகளில் இந்த முதலீடுகள் பிரான்சுக்கு கொண்டுவரப்பட உள்ளன. சென்ற வருடம் 15 பில்லியன் யூரோக்கள் முதலிடப்பட்டிருந்த நிலையில், இவ்வருடம் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக அது அதிகரித்துள்ளது.
“இது ஒரு அதிகூடிய பதிவு. ஒரு சாதனை!” என எலிசே மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது.