இடி மின்னல், ஆலங்கட்டி மழை, புயல் காற்று.. - சீரற்ற வானிலை!! - ஒன்பது மாவட்டங்களுக்கு ‘உயர் எச்சரிக்கை’

19 வைகாசி 2025 திங்கள் 06:48 | பார்வைகள் : 423
இன்று மே 19, திங்கட்கிழமை நாட்டின் பெரும்பான்மை பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவ உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பல மாவட்டங்களில் இடி மின்னல் தாக்குதல்களுடன் கூடிய மழையும், ஆலங்கட்டி மழையும், வேகமாக புயற்காற்றும் வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக Lot, Tarn-et-Garonne, Gers, Hautes-Pyrénées, Haute-Garonne, Ariège, Aude, Tarn மற்றும் Aveyron ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு ’செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாலை 5 மணியின் பின்னர் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் அங்கு புயல் வீசும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை, நாட்டின் கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் மத்திய மாவட்டங்கள் என நாட்டின் ஒரு பகுதி முழுவதுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.