■ Seine-et-Marne : வீதி விபத்தில் மூவர் பலி!!
18 வைகாசி 2025 ஞாயிறு 16:44 | பார்வைகள் : 3841
நேற்று மே 17, சனிக்கிழமை இரவு இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் மூவர் பலியாகியுள்ளனர்.
Montereau (Seine-et-Marne) நகரில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. பிறந்தநாள் விழா ஒன்றி கலந்துகொண்டுவிட்டு Peugeot 307 மகிழுந்து ஒன்றில் ஏழு பேர் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். Route de la Grande Paroisse வீதியில் மகிழுந்து பயணித்துக்கொண்டிருந்த போது, நள்ளிரவு 1 மணி அளவில் மகிழுந்து திடீரென வீதியை விட்டு விலகிச்சென்று, சுவர் ஒன்றில் மோதித்தள்ளியது. பின்னர் மகிழுந்து தீப்பிடித்து எரிந்துள்ளது.
மகிழுந்தில் பயணித்த ஏழு பேரும் தீயில் சிக்கி படுகாயமடைந்தனர். அவசர மருத்துவக்குழுவினர் அழைக்கப்பட்டு அவர்கள் மீட்கப்படுவதற்குள் மூவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரோடிருந்த நால்வர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் பலத்த எரிகாயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். மகிழுந்தின் பின் இருக்கைகளில் அமர்ந்திருந்த ஐவர் மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கோர சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan